Friday, October 22, 2010

ஜான்சி ராணி




மாலை 7 முதல் 7.30 வரை எங்கள் குடும்பமே தொலைகாட்சி முன் தான் இருப்போம். ஏன் என்றால் அப்பொழுது



ஜீ தொலைகாட்சியில் ஜான்சி ராணி எனும் நாடகம் வரும். அது மிகவும் அருமையாக உள்ளது. எங்கள் வீட்டில் அனைவரும் சேர்ந்துபார்க்கும் நிகழ்ச்சி அது தான். அதை தவிர வேறு எந்த நாடகமும் பார்பதில்லை.அதில் ராணியாக வரும் பெண் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம் ஜான்சி ராணி 150 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருப்பாரோ தெரியாது ஆனால் இந்த பெண் ராணிக்குரிய வீரங்களுடன் அவ்வளவு அழகாக இருக்கிறாள். அவள் கண்களிலும் வீரம் தெரிகறது.அவள் நடிப்பில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் வாள் வீச தெரிந்தவள். அவளை பார்த்தல் நமக்கும் வீரம் பிறக்கும்.

அவ்வளவு சிறப்பாக நடிக்கிறாள். மனுவாக அவள் செய்யும் சுட்டிதனம் மிகவும் அருமையாக இருக்கிறது. புரட்சி வீரனாக அவள் ஆங்கிலயேர்களை எதிர்ப்பது , ஏழைகாக குரல் கொடுப்பது, குதிரை ஏறுவது போன்ற சாகசங்கள் செய்யும் போது நம்மை வியக்கவைக்கிறாள் . ஜான்சி ராஜாவை திருமணம் செய்யும் போது ஏற்படும் சூழ்ச்சிகளை எப்படி எதிர்கொள்கிறாள் அவற்றை எப்படி முறியடிக்கிறாள் என்று பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. உண்மையில் அந்த காலத்தில் ஜான்சி ராணி எத்தனை இன்னல்களை எதிர் கொண்டு இருப்பாள். 10அம் வகுப்பில் அவர்களை பற்றி படித்து இருக்கிறேன் ஆனால் இப்பொது அதை பார்க்கும் போது அவர்கள் எத்தனை வீரம் மிகுந்த பெண்ணாக இருக்க வேண்டும். அந்த தைரியம் இப்போதுள்ள பெண்களுக்கு மிக மிக குறைவு . அதிலும் என் தங்கைக்கு அசல் தைரியமே இல்லை. இருட்டாக இருந்தால் அந்த பக்கமே செல்ல மாட்டாள். பூச்சி கரப்பானை கண்டாலே பயம் 10km ஓடி விடுவாள். நாய் என்றால் அவ்வளவு தான் பக்கத்தில் யார் இருந்தாலும் தொலைந்தார்கள் அவர்கள் மேல் பாதி ஏறிவிடுவாள். அமுக்குற அமுகில் ஆள் காலி ஆகிடுவார். ஆள் பார்க்க தைரியம் மிகுந்தவளாக இருப்பாள் ஆனால் நிஜத்தில் இல்லை. இப்பொழுது தான் கொஞ்சம் தைரியம் பிறந்து இருக்கிறது அதுவும் ஜான்சி ராணியால். அதனால் ஜான்சி ராணிக்கு ஒரு சபாஷ்!!!!!! !!......

Tuesday, February 10, 2009

சகலகலா விக்ரம்




விக்ரம்- அனைவருக்கும் தெரியும். நல்ல நடிகர்.அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி கண்டுள்ளது. நடிப்பதில் விக்ரம்க்கு நிகர் விக்ரம் தான்!இப்பொது பாடுவதிலும் வல்லவர் என்று காட்டிவிட்டார் கந்தசாமியாக!விக்ரம்க்கு என்னுடைய ஆல் தி பெஷ்ட்!!!!!!!!!!!!!!!

5 ஷ்டர்


எனக்கு இப்போ புதுசா வந்திருக்கும் 5 ஷ்டர் விளம்பரம் (திருடன் அட்வைஷ் செய்கின்ற விளம்பரம்)பிடிச்சிருக்கு! அதவிட 5 ஷ்டர் சாக்லேட் ரொம்பபபபபபப பிடிக்கும்!!!!!5 ஷ்டர் சாப்பிடு டேஷ்ட்ல மறைந்து போய் விடு!!!!!!!!!!!